நேதாஜி மருந்தகம்
உலகின் மூத்த மொழி தமிழ். மொழிகளுக்கு எல்லாம் தாய் மொழியான தமிழ் மொழியின் மற்றும் மொரு சிறப்பு தான் சித்த மருத்துவம்.இயற்கையை அடிப்படையாக கொண்டு பஞ்சபூத கோட்பாட்டின்படி நின்று சிவ வழிபாடு செய்யும் சித்தர்களால் சிவனருள் பெற்று உருவாக்கப்பட்டது தான் சித்த மருத்துவம்.மூலிகைகள் மற்றும் தாது பொருட்களை முறையாக சுத்தி செய்து சரியான அளவில் மருந்தாக உருவாக்கம் செய்து மனித உடலில் தோன்றும் நோய்களை இயற்கையின் வழியில் சிவனருள் உதவியுடன் தீர்ப்பதே சித்த மருத்துவம் "உணவே மருந்து" "மருந்தே உணவு" என்பதே சித்த மருத்துவத்தின் அடிப்படை
பின்வரும் 18 சித்தர்கள் கடவுளாக போற்றப்படுகிறார்கள்
- 1) நந்தி தேவர்
- 2) அகத்தியர்
- 3) திருமூலர்
- 4) புண்ணாக்கீசர்
- 5) புலத்தீசர்
- 6) பூணைக்கண்ணர்
- 7) போகர்
- 8) கருவூரார்
- 9) கொங்கணர்
- 10) புலிக்கை ஈசர்
- 11) அகப்பேய் சித்தர்
- 12) அழுகண்ணர்
- 13)சட்டைமுனி
- 14)இடைக்காடர்
- 15) குதம்பை சித்தர்
- 16) தேரையர்
- 18)காலாங்கிநாதர்
- 18) Kalangi Nathar,
ஆகியோர் இறைவனாக போற்றப்படும் சித்தர் ஆவார்கள் சித்த மருத்துவம் பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன் தோன்றிய வரலாறு பொக்கிஷம் ஆகும்.
எங்களை பற்றி
எங்களது நேதாஜி பார்மஸி நிறுவனம் 22/7/1999 - ம் அன்று தோற்றுவிக்கப்பட்டது மூலிகைகள் சிறப்பாக கிடைக்கும் பகுதியான திண்டுக்கல் நகரில் அமைக்கப்பட்டுள்ளது.1999 - ம் ஆண்டு 5 சித்த மருத்துவ பாரம்பரிய மருந்துகளையும் 5 ஆயுர்வேத சாஸ்திரிய மருந்துகளையும் தயாரிக்க உரிமம் பெற்ற நிறுவனம் இன்று 280 - க்கும் மேற்பட்ட மருந்துகளை தயாரித்து விற்பனை செய்து வருகின்றது. 2013 – ம் ஆண்டுகளுக்கு பின் மூலிகை பொருட்களின் கடுமையான விலை ஏற்றத்திற்கு பின்னும் சரியான விலையில் மருந்துகளை உயர்தரத்துடன் விநியோகம் செய்து வருகின்றோம். விற்பனை நோக்கில் மருந்துகளை தயாரிக்காமல் மக்களுக்கு நல்ல முறையில் சித்த மருத்துவ மருந்துகளை சித்தர்களின் ஆசியுடன் வழங்குவதே எங்கள் நிறுவனத்தின் கடமையாகும்.